Tuesday, 27 November 2012

நில் கவனி இரசி

வேகமாய் ஓடும் இயந்திர உலகம் என்னை 
தன்பின் இழுத்துச்சென்றது 
கண்ணயர்ந்தால் ஆமைகளும் முந்திவிடுமோ என்ற 
அச்சம் என்னை விரட்டியது 
எண்களைத் தட்டமட்டுமே இன்று விரல்கள் பயன்படுகின்றன 
வீணைகள் வீட்டின் சுவற்றோடு சாய்ந்தன.
சுதந்திரமாய் சிறையில் வாழும் இயந்திர மனிதனானேன் 
என்னைச்சுற்றி உலகம் குறுகிவிட்டது 

ஆகையால் என்னை என்னிடமிருந்து  மீட்க நான் முனைந்தேன் 
என் சிந்தனைக்கு சிறகளிதேன்.
புதுமையின் இதயத்தில் சிற்றெறும்பாய்  நுழைந்தேன் 
பட்டாம்பூச்சியாய் மாறினேன் 
இசையின் நடுவே நூலாய்ப்புகுந்தேன் 
ராகமாய் ஒலிபெற்றேன் 
மழலையர் மத்தியில் சென்று வயதைத்துலைதேன் 
நானும் மாறினேன் குழந்தையாய் !

1 comment:

  1. I have seen all your 7 blogs.Very appealing and thoughtful.Why dont you send some of these verses for publication in magazines like mangiar malar,gokulam,amudhasurabhi,kalki etc.Though I am not very conversant with tamil literature,the verses sound very nice.

    ReplyDelete