மயிலாட முகிலொன்று மழையானது - உன்
மழலைப்பேச்சில் என் இதயம் தான் மெழுகானது.
மணிமாலை உன் பல்லானது
விண்மீன் உன் விழியானது
வானவில்லாய் வந்த என் வண்ணமே
கவிதையாய் ஒலித்த என் எண்ணமே - நீ
பகலில் குளிர் தரும் வெண்ணிலவோ, இல்லை
இரவில் ஒளியாய் மின்னும் சூரியனோ - என் மயிலாட...
மென்மலரே உன் மெய்யானது
செந்தேன் உந்தன் மொழியானது
கற்பனையில் வளரும் சிறு காவியமே
மடியில் தவழும் நிஜ ஓவியமே- என்
விழியில் ததும்பும் கண்ணீர் துளியோ, அல்லது
இதழில் மலர்ந்த என் புன்னகையோ - என் மயிலாட...
No comments:
Post a Comment