நாடு என்பதில் நாட்டம் கொண்டிடு
நாளை உன்னை வாழவைக்கும் தெய்வம் போன்றது
வீடு என்பது அதன் அங்கமானது
நாடு உயர வீடு உயரும் நம்பி வாழ்ந்திடு
வீரர் தோன்றினர் நாட்டைக்காத்தனர்
தீரர் இங்கு செல்வமெல்லாம் செழிக்கச்செய்தனர்
வேதம் தன்னையே போற்றி வாழுவோம்
தெய்வ பாதம் வணங்கும் யாவருமே புனிதமானவர்
தேசம் என்பது தேவரூபமே
வாசம் புரியும் யாவரையும் வாழ வைத்திடும்
இம்மண்ணின் வாசமே வானை முட்டுமே
தேவரெல்லாம் வாழ்த்திடுவர் வணங்கும் யாரையும்.
தீபம் போன்றது தூய்மையானது
தவித்தவரின் தாகம் தீர்க்கும் கங்கையானது
மனிதநேயமே தம் வாழ்கை என்றனர்
படகையோட்டி பாசத்திற்கு விளக்கமளித்தனர்
இறைவன் காணவே கண்ணைத்தந்தனர்
இன்றளவும் இவர்கள் புகழ் பாடும் மண்ணிது
பாரத நாட்டினர் கடமையாற்றுவர்
புனிதர் வாழும் பூமியென்று பெருமைகொள்ளுவர்
No comments:
Post a Comment