Sunday, 18 November 2012

உன்னில் பாதியாய்

காற்றிலே க‌ல‌ந்து உன் வாய்மொழியாய்
வெளியேற‌ வ‌ர‌ம்த‌ருவாய்
நேற்றை ம‌ற‌ந்தேன் இன்றே பிற‌ந்தேன்
உன்னில் பாதியாய்

கால்‌கொண்டு ந‌ட‌ந்து வ‌ந்த‌ தென்ற‌ல்
புல்லின் த‌லைகோதி செல்வ‌து போல்
நீ ந‌ட‌ந்து வ‌ருவாய் என‌ உன் பாதையில்
நானும் புல்ல‌னேன்
க‌னிக்கூட்ட‌ம் உன் இத‌ழான‌தென்று நானும்
ப‌ழ‌ர‌ச‌ம் ப‌ருக‌ த‌வித்திருந்தேன்‍, உயிரே
நேற்றை ம‌ற‌ந்தேன் இன்றே பிற‌ந்தேன்
உன்னில் பாதியாய்

நீர்க்கொண்டு த‌வ‌ழ்ந்து வ‌ந்த‌ மேக‌ம்
ம‌ழையாய் ம‌ண்ணில் சேர்வ‌து போல்
உன் பாத‌ம் ப‌டுமென்று நீ வ‌ரும் பாதையில்
நானும் ம‌ண்ணானேன்
கார்மேக‌ம் உன் கூந்த‌லான‌தென்று நானும்
ம‌ழையில் ந‌னைய‌த்துடிக்கிறேன், க‌ன‌வே
நேற்றை ம‌ற‌ந்தேன் இன்றே பிற‌ந்தேன்
உன்னில் பாதியாய்

No comments:

Post a Comment